Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 3, 2013

    பிளஸ் 2 தேர்வு: தமிழ் பாடத்திற்கான கேள்வித்தாளில் குளறுபடி - நாளிதழ் செய்தி

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த பிளஸ் 2, தமிழ் முதல் தாள் கேள்வித்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 100க்கு, 63 மதிப்பெண்களுக்கான 29 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள் அப்படியே ரிப்பீட் ஆகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் முதல் தாள் கேள்வித்தாளை வடிவமைத்த, ஆசிரியர் குழு மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினம், பொதுத் தேர்வு துவங்கியது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், மொழி முதல் தாள் தேர்வை எழுதினர். தேர்வெழுதிய மாணவ, மாணவியர், தேர்வு மிகவும் எளிதாக இருந்தது எனவும், மதிப்பெண்களை அள்ளுவோம் எனவும், கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், கடந்த 2012 மார்ச் மாதம் நடந்த தமிழ் முதல் தாள் கேள்வித்தாள், அப்படியே, இந்த ஆண்டும், ரிப்பீட் ஆகியுள்ள அதிர்ச்சித் தகவல், நேற்று வெளியானது. மொத்தம் 10 பகுதிகளில், 50 கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில், கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

    இதில், மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 63 மதிப்பெண்களுக்கான 29 கேள்விகள், அப்படியே வரி பிசகாமல், இந்த ஆண்டு கேள்வித்தாளிலும் இடம் பெற்றுள்ளன. பகுதி ஒன்று, ஆறு, எட்டு, 10 ஆகிய நான்கு பகுதிகளைத் தவிர்த்து, மீதம் உள்ள ஆறு பகுதிகளில் உள்ள கேள்விகள் அப்படியே, மீண்டும் கேட்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாகவே, மாணவ, மாணவியர், மிக எளிதாக தேர்வை எழுதியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில், 63 மதிப்பெண்களுக்கான கேள்விகள், அப்படியே கேட்டிருப்பது, கல்வித் துறை மற்றும் தேர்வுத் துறையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது போன்று, மாபெரும் குளறுபடி, இதற்கு முந்தைய தேர்வுகளில் ஏற்பட்டது இல்லை என, ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து, தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது: கேள்வித்தாள் தயாரிக்கும் ஆசிரியர் குழுவிடம், பழைய கேள்வித்தாள் மற்றும் வினாத்தாள் மாதிரி அமைப்பை கொடுத்து, புதிய கேள்வித்தாள் தயாரிக்க, தேர்வுத் துறை கேட்டுக் கொள்ளும். அப்படி வழங்கப்பட்ட கடந்த ஆண்டு தமிழ் முதல் தாள் கேள்விகளை, அப்படியே, இந்த ஆண்டும் கேட்டு விட்டனர்.

    ள்வித்தாள், எந்த ஆண்டுக்கானது என்பது அச்சிடப்படுவது இல்லை. கேள்வித்தாளின் மேல் பகுதியில், மார்ச் - 2012ம் ஆண்டு என, அச்சிடப்பட்டு இருந்தால், கேள்வித்தாள் தயாரிக்கும் குழு, உஷாராக இருந்திருக்கும். இப்படி அச்சிடாததன் காரணமாக, பல ஆண்டுகளுக்கு முந்தைய கேள்வித்தாள் என நினைத்து, அப்படியே கேட்டுள்ளனர்.

    ஒன்று, இரண்டு கேள்விகள், அப்படியே திரும்பவும் கேட்பர். ஆனால், இப்படி, ஒட்டுமொத்த பகுதிகளுக்கான கேள்விகளையும், அப்படியே கேட்டிருப்பது, இதுவே முதல் முறை. இந்த குளறுபடிகளுக்கு, தேர்வுத் துறை தான், முழு காரணம். 75 சதவீதம் அளவிற்கு, கேள்விகள் திரும்ப கேட்டிருப்பதால், இந்த தேர்வையே ரத்து செய்து, மறுதேர்வை நடத்த வேண்டும். இதுதான் முறை.

    அப்படியே பூசி மழுப்பினால், அது, தேர்வுத் துறைக்கும், கல்வித் துறைக்கும் பெரும் களங்கம் தான் ஏற்படும். இவ்வாறு தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே, கேள்வித்தாளை வடிவமைத்த, ஆசிரியர் குழுவினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    No comments: