மாணவர்களுக்கு, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் கடிதத்தை, பள்ளிகள், பெற்றோரிடம் பெற்று வருகின்றன. மீசில்ஸ் என்ற தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் ஏற்படுத்தும் நோய்களுக்கு, ஒரே தடுப்பூசி போடும் திட்டம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை, ஐ.நா., சபையின், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் முதல் கட்ட தடுப்பூசிக்கு, தமிழகம் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஆனால், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி குறித்து, சிலர், 'வாட்ஸ் ஆப்'பில், வீண் வதந்தி பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, போலீசுக்கு, சுகாதாரத் துறை பரிந்துரைத்து உள்ளது.இந்த தடுப்பூசி முகாம், பிப்., 6 முதல், 28 வரை நடக்கிறது. பள்ளிகளில் நேரடியாக குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்பட உள்ளதால், பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரின் பெற்றோர் கையெழுத்துடன், ஒப்புதல் கடிதம் பெறும் பணி துவங்கி உள்ளது.
No comments:
Post a Comment