செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கி நடைமுறைகள் தற்போது செல்போன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் செல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி. படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப்ரீபெய்டு மொபைல் போன்கள் விஷயத்தில் கட்டாயம், அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட வேண்டும். கிரிமினல், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்த நம்பர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கவே கண்டிப்பான இந்த உத்தரவு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகார், படிப்படியாக இதை நடைமுறைப்படுத்தலாம். ரீசார்ஜ் வசதியை அவர்களுக்கு வழங்காமல் 6 மாத காலத்தில் அவர்கள் பற்றிய முழு விவரத்தையும் தீர விசாரித்தறியலாம் என்று கூறினார்.
சிம் கார்டு பெறுபவர்கள் யார் எங்கிருப்பவர்கள் என்ற விவரங்கள் எதுவும் முறைப்படி விசாரணை இல்லாம் நாட்டில் சுமார் 5 கோடி ப்ரீபெய்டு சந்தாராரர்கள் இருக்கிறார்கள் என்று லோக் நிதி பவுண்டேஷன் என்னும் அமைப்பு தொடர்ந்த ஒரு பொது நல வழக்கையடுத்து உச்சநீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment