அரசு பள்ளி ஆண்டு விழாவில், மாற்றுத்திறனாளி மாணவன், 100 திருக்குறளை ஒப்புவித்து பாராட்டை பெற்றார். மஞ்சூர் அடுத்துள்ள மேல்கேம்பில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்று பேசுகையில், “இந்த பள்ளியில் செயல்பட்டு வரும் பி.டி.ஏ., மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளிக்கு இணையாக ஆங்கிலம் வகுப்பு துவக்கப்பட்டு கல்வியில் சிறந்து விளங்க மாணவர்களை தயார்படுத்தி வருகிறோம். விளையாட்டு, கம்ப்யூட்டர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அரசால் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி உயரும் வகையில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் ரகு பேசுகையில், “இன்றைய சூழலில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
இந்த பள்ளியிலும் தனியார் பள்ளியை போல் ஆங்கில வகுப்புகள் துவக்கப்பட்டு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி வருவது பாராட்டத்தக்கது,” என்றார்.
பின், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 5ம் வகுப்பு படிக்கும், மாற்றுத்திறனாளி மாணவர் அனீஷ், 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிர்வாகி ரஞ்சித், உட்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியை சபிதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment