புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு நாளை பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பு திடீர் ரத்து. ஜெயலலிதா மறைவு விடுமுறைக்கு பதிலாக சனிக்கிழமை 4-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பை கல்வித்துறை திடீரென திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஜெயலலிதா மறைவிற்காக புதுச்சேரி அரசு, கடந்த டிசம்பர் 6-ம் தேதி பொது விடுமுறை விடுத்தது. ஆனால் இதற்கு மாற்றுத் தேதியில் அதாவது நாளைய தினம் பள்ளிகள் இயங்கும் என
கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் கண்டனத்தை தெரிவித்தார். ஒரு தலைவர் மறைவிற்கு அரசு விடுமுறை அளித்துவிட்டு அதற்காக மாற்று தினத்தில் பள்ளியை நடத்துவது என்பது அந்த தலைவரை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர், செயலர், இயக்குனர் ஆகியோர் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்றார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3-30 மணிக்கு கல்வித்துறையின் உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment