பொள்ளாச்சி அருகே மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ’பள்ளிகள் பரிமாற்ற திட்டம்’ நிறைவு விழா நடந்தது. பொள்ளாச்சி வடக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையத்திற்குட்பட்ட மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், ஆனைமலை வட்டார வள மையத்திற்குட்பட்ட நரசிம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் நடப்பாண்டிற்கான ’பள்ளிகள் பரிமாற்ற திட்டத்தில்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, ஐந்து வகுப்புகள் நடந்தன.
இத்திட்ட நிறைவு விழாவையொட்டி, மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இருபள்ளி மாணவர்களும் கற்றல், கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரன் செய்திருந்தார்.
ஆனைமலை நரசிம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற திட்டம் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியப் பயிற்றுனர்கள் பாக்கியலட்சுமி, அதன்யா மற்றும் மண்ணுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் லதாகுமாரி, விஜயகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் ஜீவகலா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment