தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி தரம் குறித்து பாரதம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி அசர் அறிக்கை கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இந்தாண்டுக்கான பள்ளி கல்வி தரம் குறித்த அறிக்கையை அசர் வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 47.8 சதவிகித மாணவர்களால் மட்டும்தான் இரண்டாம் வகுப்பு பாடத்தைப் படிக்க முடிகிறது. மேலும்,எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 73.1 சதவிகித மாணவர்களால் மட்டும்தான் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடிகிறது மற்றும் 29.6 சதவிகித மாணவர்களால் படிக்க முடியவில்ல என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,மூன்றில் ஒரு மாணவருக்கு அடிப்படையான கணிதம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியவில்லை. அதேபோல்,தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் குறைந்து வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு மாணவர்கள் படிப்பில் பின் தங்கியிருப்பதற்கு கட்டாய தேர்ச்சி முறை ஒரு குறையாக காணப்படுகிறது. முன்பு, அனைத்து பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை நடைமுறையில் இருந்து வந்தது. இதனால், மாணவர்களிடம் இருக்கும் கல்வித் திறமை மற்றும் தனித்திறமை என அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால்,மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, கல்வியாளர்களிடம் இருந்து பல்வேறு எதிர்மறையான கருத்துகள் வந்ததால், 8ஆம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை 5 ஆம் வகுப்பு வரை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதையே தவிர்க்கின்றனர். நாட்டில், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38.01 கோடி பேர் ஐந்து வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 6.54 கோடி பேர் பள்ளிக்கு சென்றதில்லை.மேலும் 4.49 கோடி பேர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். 26.98 கோடி பேர் மட்டுமே பள்ளிகளுக்கு சென்று முறையாக கல்வி பயின்றுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இப்படி ,மாணவர்கள் படிப்புத் திறன் குறைந்து வருவது கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment