மதுரை மாவட்டத்தில் பிப்., 6 முதல் 18 வரை பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. இதுதொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, முருகானந்தம், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) ஆஞ்சலோ இருதயசாமி பேசுகையில், ‘செய்முறை தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர் மதிப்பெண் விபரம் பிப்., 16 முதல் 20க்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புகாரின்றி தேர்வு நடத்த வேண்டும். இந்தாண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என்றார்.
No comments:
Post a Comment