அதன் படி சுமார் 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.
இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment