'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு' என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டு வரை, இரண்டு வகை இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதாவது, 10ம் வகுப்புக்கு பின், வேறு பாடத்திட்டத்துக்கு மாறுவோருக்கு, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறை தேர்வும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திலேயே, பிளஸ் 1 படிப்போருக்கு, கட்டாய பொதுத் தேர்வும் அமலில் உள்ளது.
இந்நிலையில், வெறும் சி.சி.இ., அடிப்படையிலான, பள்ளி அளவிலான தேர்வு முறையால், மாணவர்களின் கற்றல் தரம் குறைந்துள்ளதாக, நிபுணர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளி அளவிலான சி.சி.இ., இறுதி தேர்வை ரத்து செய்து, பொதுத் தேர்வை கட்டாயமாக்க, மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு பரிந்துரை செய்தது.இது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதற்கு, கடந்த மாதம், சட்ட அமைச்சகம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, கட்டாய பொதுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, நேற்று இரவு, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது. புதிய அறிவிப்பின்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் படிக்கும், அனைத்து, 10ம் வகுப்பு மாணவர்களும், பொதுத் தேர்வு எழுத வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஏற்கனவே இருக்கும் இரட்டை தேர்வு முறையே நீடிக்கும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment