மழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் வீடு, வாகனம், தொழில் நிறுவனங்களில், தண்ணீர் புகுந்து, பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோரி, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல வசதிகளை துவக்கி உள்ளன.
இதுகுறித்து, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:வௌ்ளத்தில் பாதித்த பாலிசிதாரர்களுக்கு, இழப்பீடு தொகை உடனே வழங்க, அலுவலகங்களில் தனி பிரிவு துவங்கப்பட்டு உள்ளது. பல இடங்களில், இன்சூரன்ஸ் நிறுனங்களின் கூட்டு, சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது காப்பீட்டு ஆவணம் தண்ணீரில் அடித்து சென்றால், பாலிசிதாரர் கவலை அடைய தேவையில்லை. காப்பீடு எடுத்த வீடு, வாகனம் உள்ளிட்ட விவரத்தை தெரிவித்தால் போதும்.அந்த விவரம், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில், தீவிர ஆய்வு செய்யப்படும். மதிப்பீட்டாளரை, ஆய்விற்கு நேரில் அனுப்பி, இழப்பு தொகை மதிப்பிடப்படும்
அவரின் அறிக்கையின்படி இழப்பீடு தொகை வழங்கப்படும்வாகனத்தின், 'ஆர்.சி.,' என்ற பதிவு சான்றிதழ் இல்லை என்றால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திடம் இருந்து வாங்கி, உரிமையாளரிடம் வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment