வெள்ளப் பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் வெளியிட்ட அறிவிப்பு:
வெள்ளப் பாதிப்பில் பலர் தங்களுடைய பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், கட்டணம் இன்றி உரிய சான்றிதழ்கள் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சான்றிதழைத் தவறவிட்டத்தற்கான காவல் துறை சான்றிதழ், நகர்மன்ற உறுப்பினர் அல்லது வட்டாட்சியரின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தால் போதுமானது. அவர்களுக்கு உடனடியாக மறு சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment