பிற மாநிலங்களை போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும்,” என சிவகங்கையில் அரசு ஊழியர் (ஓய்வு) சங்க மாநில செயலாளர் எஸ்.சுந்தன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1995 வரையிலான டி.ஏ., நிலுவை தொகை வழங்க வேண்டும். 'ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருத்துவ செலவில் 75 சதவீதம் வழங்குவோம்' என்றனர்.
ஆனால், 'ஆப்பரேஷனுக்கு மட்டுமே செலவில் 30 சதவீதம் தரப்படும்' என ஓய்வூதியர் குடும்பத்தை அரசு ஏமாற்றிவிட்டது. அரசு ஊழியரிடம் 4 ஆண்டு பிடித்தம் செய்து ரூ.4 லட்சம் காப்பீடு வழங்குகின்றனர். ஓய்வூதியர்களுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே கிடைக்கிறது.
குஜராத், உத்தரபிரதேசத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 வழங்குகின்றனர். ஆனால், தமிழக அரசு வழங்குவது ரூ.3,050 தான். அதிலும் சத்துணவு ஊழியர், கிராம உதவியாளர், அங்கன்வாடி ஊழியருக்கு மாதம் வெறும் ரூ.1,000 மட்டுமே. இத்தொகையும் 4 மாதத்திற்கு ஒரு முறை தான் கிடைக்கிறது. கம்யூடேஷன் தொகை பிடித்தம் செய்யும் காலம் 15 ஆண்டாக இருப்பதை 12 ஆக குறைக்க வேண்டும்.
2005க்கு முன் ஓய்வு பெறுவோருக்கு 'கிரேடு பே' 40 சதவீதம் தான். ஆனால், 2006க்கு பின் ஓய்வு பெற்றோருக்கு அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத 'கிரேடு பே' அரசு வழங்குகிறது. இதன் மூலம் 2006க்கு முன் ஓய்வு பெற்றோருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது, என்றார்.
No comments:
Post a Comment