தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையின் தாக்கம் குறைவதற்கு முன்பாகவே, மீண்டும் சென்னையில் திங்கள் கிழமை முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னை நகரமே வெள்ளக்கடாக மிதந்து வருகின்றது.
இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
இன்று காலை 8.30 மணி வரை சென்னை-நுங்கம்பாக்கம் பகுதியில் 29.3 மி.மீட்டரும், மீனப்பாக்கத்தில் 33.9 மி.மீ, எண்ணூரில் 2.31மி.மீ, மாதாவரம் பகுதியில் 2.57 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment