எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது. இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது.
இவற்றிற்கிடையே ஒவ்வொறு தொகுதியிலும் கணிசமான ஓட்டுகளை வைத்துள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,ஆளும் அ.தி.மு.க மீது அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரே ஒரு அதிருப்தி மட்டுமே இருப்பதாகவும் அது என்னவெனில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்த மீண்டும் பழைய பென்சன் திட்டம்,6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும் என்பது களையப்படாதது மட்டுமே ஆகும்.ஒருவேளை மீதமுள்ள நாட்களில் அவை நிறைவேற்றப்பட்டால் இவர்களின் (அரசு ஊழியர்களின்) வாக்குகள் அ.தி.மு.க.விற்கே செல்லும் என்பதால் போட்டி எளிமையாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் பேரணியில் பேசிய தி.மு.க.பொருளாளர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேலே சொன்ன கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment