தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) பள்ளி நிர்வாகிகளின் சங்கம் பதில் அளிக்க 2 வாரம் கூடுதல் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் இன்று அளித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இக்பால், நாகப்பன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் இன்று நடைபெறுவதாக இருந்தது. விசாரணை தொடங்கு முன், சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) பள்ளி நிர்வாகிகளின் சங்கம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, பதில் அளிக்க இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கைவிடுத்தார்.
இதையேற்ற நீதிபதிகள் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதிலுக்கு எதிர் பதில் தாக்கல் 2 வாரம் கூடுதல் அவகாசம் அளித்தனர்.
No comments:
Post a Comment