ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுவதால், காலாண்டு தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் - எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; வேலை நாட்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக, சில ஆசிரியர் கூட்டணி சங்கங்கள், மாநில தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:எஸ்.எஸ்.ஏ., சார்பில், கடந்த மாதமும், இம்மாதமும், தலா, ஆறு நாட்கள் ஆங்கிலப் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த, 9ம் தேதி துவங்கி, மூன்று கட்டங்களாக, கணிதப் பயிற்சி வழங்கப்படுகிறது.காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ள நாட்களில், அறிவியல், ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும், கட்டாயம் ஒரு ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என்ற சூழலில், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment