தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 19ல் முதல் பருவ தேர்வு துவங்குகிறது; தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்கு தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், கணித உபகரண பயிற்சி, 9, 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட்டது; இரண்டாம் கட்டமாக, 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18ம் தேதிகளிலும், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர்; சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாட்கள் தர வேண்டிய பயிற்சியை, ஒரே சமயத்தில் பருவ தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது, கேள்விக்குறியாக உள்ளது; இதனால், பள்ளி களில் ஆசிரியர் பணியை பாதிக்கிறது.
முதல் பருவ தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment