பள்ளிக்கல்வித் துறையின் கீழ், பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு நடமாடும் உளவியல் மையம் வாயிலாக, சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க, மூன்று கோடி ரூபாய் மதிப்பில், 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், பள்ளி மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், 10 உளவியல் நிபுணர்களால் அனைத்து மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உளவியல் நிபுணர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களின் உதவியோடு பிரச்னைக்குரிய மாணவர்களை எளிதாக கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு மனநலம் மற்றும் மாணவர்களை கையாளும் விதம் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் செயல்பாடுகள், பிரச்னைக்குரிய மாணவர்களை கண்டறிதல், அவர்களின் மாறுபட்ட செயல்பாடுகள் போன்றவை குறித்து பயிற்சிகளின் போது தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் விளைவாக, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன் பிரச்னைக்குரிய மாணவர்கள் குறித்த விபரங்கள் அந்தந்த மண்டல உளவியல் நிபுணர்களிடம் தெரிவிக்கின்றனர். அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில், பிரச்னைக்குரிய மாணவர்கள் எளிதாக அடையாளம் காணப்படுவதால் உடனடியாக கவுன்சிலிங் வழங்கமுடிகிறது, என்றார்.
No comments:
Post a Comment