தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார். இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவலாகும்.
தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி-யிடம் அங்கீகார நீட்டிப்பு பெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.அதன்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கு அங்கீகார நீட்டிப்புக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அங்கீகார நீட்டிப்பை யுஜிசி வழங்கியிருக்கிறது.மேலும், பல்கலைக்கழகத்துக்கு 12(பி) தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் தகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment