பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 25ல் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் முதல்வர் சந்திப்பு பேரணி நடத்த உள்ளதாக மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, பொதுச்செயலர் ராமநாதன், பொருளாளர் சுந்தரம்மாள் ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.26 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 40 ஆயிரம் பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.
1982ல் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது. எங்களின் 34 அம்ச கோரிக்கைகளில் நிர்வாக ரீதியான 10 கோரிக்கைள் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால் ஏப்., 13ல் நடந்த சமரச பேச்சு வார்த்தையால் நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டது.
பிரதான கோரிக்கைகள் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் நிறைவேற்றப்படும் என்ற உறுமொழி நிறைவேற்றப்படவில்லை.25 குழந்தைகள் கொண்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும்.
ஓய்வூதிய பணக்கொடையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.3,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18ல் ஆர்ப்பாட்டமும், செப்., 25ல் சென்னையில் 65 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கும் முதல்வர் சந்திப்பு பேரணியும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment