வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தால், 'இதற்கு முன் ஏன் விண்ணப்பிக்கவில்லை' என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2016 ஜன., தேதி, 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
முதன்முறையாக விண்ணப்பிக்கும், 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர, மற்றவர்கள் அவர்களின் முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமல் இருந்தாலும் கூட, இப்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவு; முன்னர் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க இயலாத காரணம் அல்லது இப்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம் ஆறில், பாகம் நான்கை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். இதுகுறித்து, தேர்தல் அதிகாரி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், பதிவாகி உள்ள பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் வாக்காளர்கள், முகவரி மாறி செல்லும்போது, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்காமல், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்.
இதனால், இரண்டு இடங்களில், அவர்களின் பெயர் பதிவாகிறது. இதை தவிர்க்க, 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம், 'ஏன் இதுவரை பெயர் சேர்க்க வில்லை' என, விளக்கம் கேட்கப்படுகிறது. ஏற்கனவே வேறு முகவரியில் பெயர் இருந்தால், படிவம் நான்கை பூர்த்தி செய்து தரும்போது, தானாக வேறு இடத்தில் உள்ள, அவர்களின் பெயர் நீக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment