ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேருவதற்கான "ஜேம்' 2016 ஒருங்கிணைந்த சேர்க்கை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் "ஜேம்' தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்கின்றன.
2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது. 2016 பிப்ரவரி 7 ஆம் தேதி ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க அக்டோபர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு http:jam.iitm.ac.injam2016 என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment