Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 16, 2015

    ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 


    பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி அடையாத, வருகை புரியாத மாணவர்களுக்காக, ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் அரசுத் தேர்வு துறையால் நடத்தப்பட உள்ளன.

    பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் வரும் மே 20-ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

    பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான தேதிகள், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது அறிவிக்கப்படும். தற்போது பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: