அறை கண்காணிப்பாளர்கள், மொபைல் ஃபோன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.
தமிழக கல்வி துறை மூலம் வரும், 31ம் தேதி ஆய்வக உதவியாளர் பணிக்காக தேர்வு நடக்கிறது. ஈரோட்டில், 147 பணிக்கு, 33,231 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு வினாத்தாள், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், போலீஸ் பாதுகாப்புடன் உள்ளது.வரும், 31ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்கி, 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது.
இந்நிலையில் நேற்று, தேர்வு அலுவலர்களுக்கான கூட்டம், ஈரோட்டில் நடந்தது. சி.இ.ஓ., அய்யண்ணன் கூறியதாவது: தேர்வுக்காக, ஈரோட்டில், 26, கோபியில், 23 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர், 1,750 பேர், பறக்கும் படையில், 150, வழித்தட அலுவலர்கள், 10 பேர், முதன்மை கண்காணிப்பாளர்கள், 49, துறை அலுவலர்கள், 49, கூடுதல் துறை அலுவலர்கள், 12, கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 12 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு மையத்துக்கு சராசரியாக, 1,000 பேர் வரை தேர்வு எழுதுகின்றனர். 1,000 மொபைல் ஃபோன்களையும் பத்திரமாக, பாதுகாத்து வைத்திருக்க முடியாது.மொபைல் ஃபோன் பாதுகாக்கும் பொறுப்பை, கல்வி துறை ஏற்க முடியாது. எனவே, தேர்வு எழுத வருபவர்கள் மொபைல் ஃபோனை தவிர்க்க வேண்டும். கொண்டு வந்தாலும், தேர்வு அறைக்கு வெளியே, தங்கள் சொந்த பொறுப்பில் வைத்து கொள்ள வேண்டும். எலக்ட்ரானிக் கருவிகளை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல கூடாது.
மொபைல் ஃபோனை, அறை கண்காணிப்பாளர்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே கண்காணிப்பாளர்களும் மொபைல் ஃபோனை எடுத்து செல்ல கூடாது. அனைத்து மையங்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விடைத்தாள்கள், சென்னைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.மாற்று திறனாளிகள் வசதிக்காக, தரை தளத்திலேயே தேர்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும், இரண்டு ஆசிரியர்கள் இருப்பர். தேர்வு எழுதுவோர் கேட்கும் பட்சத்தில் "ஸ்ரைபர்' அனுமதிக்கப்படுவர்.ஹால்டிக்கெட் கிடைக்க பெறாதவர்களுக்கு "வெற்று' ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பட்டியல் எங்களிடம் இருக்கும். எனவே, அதனை கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். 100 பறக்கும் படை உறுப்பினர், 49 முதன்மை கண்காணிப்பாளர், 13 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், 49 துறை அலுவலர்கள், 13 கூடுதல் துறை அலுவலர்கள், 10 வழித்தட அலுவலர்களுக்கு இன்று (நேற்று) பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. நாளை (இன்று) மீண்டும் கூட்டம் நடக்கிறது. அதன் பின் ஆசிரியர்கள், 31ம் தேதி நடக்கும் தேர்வு மையத்துக்கு சென்று, பணியாற்ற வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment