தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015) மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.
நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று500 ஆசிரியர்பயிற்றுநர்களைப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர். அக்கலந்தாய்விற்கு, தரஎண்/ஆண்டு-முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக 800பேர் அழைக்கப்பட்டு, அதிலிருந்து 500பேர் விருப்பத்தின்பேரில் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர். ’பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமின்மை’ தெரிவிப்பவர்களுக்குப் பதிலாக, 500 எண்ணிக்கை முழுமையடையும் வரை முன்னுரிமை/விருப்பத்தின்பேரில் செல்பவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, பிறமாவட்டங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட 2009-2010 ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு பொதுவிருப்பமாறுதல் கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகே, அனைவருக்கும் பொது விருப்பமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய நியமனம் செய்யப்படவும் உள்ளது.
No comments:
Post a Comment