தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு சனிக்கிழமை வரை 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 9,763 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 403 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 33,527 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 9,763 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.
தமிழக அரசின் சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org--இல் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment