கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.
தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ,உறவினர்களை தொலைபேசி,எஸ்.எம்.எஸ் வழியாக தொடர்பு கொண்டு அவர்களை வெற்றி பெறச் செய்தனர்.கம்யூனிஸ்ட் அரசு சங்க தலைவர்களும் இதற்கு பாடுபட்டனர்.
இன்று அரசு ஊழியர் சங்கமும்,ஆசிரிய சங்கங்களும் முந்தைய அதே 2 கோரிக்கைகளுக்கு மீண்டும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கே ஆதரவு எனக் குரல் கொடுக்கின்றன.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வோட்டுக்கள் வேண்டாம் என அரசியல் கட்சிகள் எண்ணுகின்றனவா?
நோட்டாவுக்கு பதிவு செய்யலாமா?
ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் ஓட்டுக்கள் மிகப் பெரும் மாற்றத்தை தரும் என்பதினை யாரும் மறுக்க முடியாது.
1 comment:
Teachers and Government officials are requested to vote for Notto. Political parties cheat us in every elction.
Post a Comment