நாட்டின் முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்த 1952-ல் 10 கோடியே 45 லட்சம் ரூபாய், 1957-ல் 5 கோடியே 90 லட்சம் ரூபாய், 1962-ல் 7 கோடியே 32 லட்சம் ரூபாய், 1967- 10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், 1971-ல் 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய், 1977-ல் 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம்
ரூபாய், 1980-ல் 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 1984-ல் 81 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய், 1989-ல் 154 கோடியே 22 லட்சம் ரூபாய், 1991-ல் 359 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 679 ரூபாய், 1996-ல் 597 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய், 1998-ல் 666 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய், ஆட்சிக் கலைப்பால் அதற்கு அடுத்த ஆண்டே, 1999-ல் நடந்த தேர்தலில் 880 கோடி ரூபாய், 2004-ல் ஆயிரத்து 300 கோடி ரூபாய், 2009-ல் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை வைத்தும், கடந்த 5 ஆண்டுகளில் மலை போல உயர்ந்துவிட்ட விலைவாசிகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது இந்த ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் செலவு 3 ஆயிரம் கோடியில் இருந்து 3 ஆயிரத்து 500 கோடி வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment