ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, நாளை வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாளன்று, பூத்களில் ஓட்டுப்பதிவு அலுவலர்களாக நியமித்து உள்ள அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான, இறுதிகட்ட பயிற்சி, சட்டசபை தொகுதி வாரியாக அளிக்கப்பட உள்ளது. ராஜபாளையம் தொகுதியில் ராஜூக்கள் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரி, சாத்தூரில் எட்வர்ட் மேல்நிலை பள்ளி, சிவகாசியில், சாட்சியாபுரம் எஸ்.சி.எம். எஸ். பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகரில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலை பள்ளி, அருப்புக்கோட்டையில், தேவாங்கர் கலை கல்லூரி, திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலை பள்ளி போன்ற இடங்களில், பயிற்சி முகாம்,நாளை (ஏப்., 23 ) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஏப்., 16ல் பயிற்சியில் கலந்துகொண்ட, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அதே மையத்தில் கலந்துகொள்ளவேண்டும். அன்று, ஓட்டுச்சாவடி பெயர் அடங்கிய பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தொலைவாக உள்ள பூத்களுக்கு செல்ல, பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்து உள்ளார்.
1 comment:
நல்ல ஏற்பாடு. பாராட்ட வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள்
Post a Comment