பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 8.78 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள் தங்களது பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in.
இவற்றில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள்: மாணவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவுகளை மே 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் அறிந்து கொள்ளலாம். அதற்காக 09282232585 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்டவாறு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.
TNBOARD spaceRegister NoDOB in DDMMYYYY என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்யலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment