ஆசிரியர்களின் வாக்குகளை பயன்படுத்த இயலாத நிலையை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை எதிர்த்து 28.04.2014 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டதிற்கு தலைமை இராஜேந்திரன், மாவட்ட தலைவர் வகிக்கிறார். முன்னிலை அமுல்ராஜ் மாவட்ட செயலர் வகிக்கிறார்.
கண்டன பேரூரை தா.கணேசன், STFI அகில இந்திய துணை தலைவரும், எஸ்.மோசஸ், மாநில பொருளாளர் ஆற்ற உள்ளனர். நன்றியுரையை ஜேம்ஸ் அந்தோணி தாஸ், மாவட்ட பொருளாளர் ஆற்ற உள்ளனர். தேர்தல் பணிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 4000க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 90% ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கப்படாததை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இடம் : நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம், திண்டுக்கல்
தகவல் : பெடரிக் ஏங்கல்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர், TNPTF, திண்டுக்கல்
No comments:
Post a Comment