எதிர்வரும் 24.4.2014 -ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தோóதலுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோóவு செய்யப்பட்டு, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப்பயிற்சி நாளை(ஏப்.23) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 23 -ம் தேதி கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், விராலிமலை தொகுதியில் பணம்பட்டி மகாத்மா பொறியியல் கல்லூரியிலும், புதுக்கோட்டை தொகுதியில் அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருமயம் தொகுதியில் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குடி தொகுதியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அறந்தாங்கி தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அனைத்து அலுவலர்களுக்கும் மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது.
இந்த நாளில் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி விபரங்களுடன் நியமன ஆணை மேற்குறிப்பிட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தில் நேரில் வழங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்
No comments:
Post a Comment