பாராளுமன்ற தொகுதியில் வாக்குச் சாவடி பணி நியமன ஆணை பெற்ற அனைத்து அலுவலர்களும், நாளை நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
வாக்குச்சாவடி அலுவலர்கள்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களும் கடந்த 12–ந் தேதி ஆஜரான பயிற்சி மையத்தில் மீண்டும் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அவரவர்களுக்கான வாக்குச்சாவடி நியமன ஆணையை பெற்றுக் கொண்டு பயிற்சி மையத்தில் இருந்து நேரிடையாக வாக்குச்சாவடி பணிக்கு செல்ல வேண்டும்.
குற்றவியல் நடவடிக்கை
இதில் எந்தவிதமான முறையீடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட நாளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வாக்கு சாவடி பணிக்கு செல்ல தவறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கையும், துறைவாரியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment