தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு, கிரேடு அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர் பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி, கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார்.
ஓட்டுப்பதிவு முடிந்து வீடு திரும்பியவர் மாரடைப்பில் மரணமடைந்தார். அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலக உதவியாளர் மாரிமுத்து, 56, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment