ரோட்டோரம் நின்ற டிராக்டர் மீது, டூவீலர் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார். கமுதி கோட்டைமேட்டை சேர்ந்தவர் இருளப்பசாமி(30). அருப்புக்கோட்டை அரசுப் பள்ளி யில் ஆசிரியராக இருந்தார். நேற்று முன்தினம் இருளப்பசாமி, அருப்புக்கோட்டையில் இருந்து தனது சொந்த ஊரான கோட்டைமேட்டிற்கு டூவீலரில் வேகமாக வந்து கொண்டிருந்தார்.
கமுதி அருகே தனியார் தோட்டம் இருக்கும் பகுதியில் ரோட்டோரம் டிராக்டர் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அதன்மீது இருளப்பசாமியின் டூவீலர் மோதியதில் காயத்துடன் ரோட்டில் விழுந்தார். அதேபோல் மற்றொரு டூவீலரில் வந்த முனியசாமி, ஈஸ்வரன் ஆகிய 2 பேரும் டிராக்டர் மீது மோதியதில் காயம் ஏற்பட்டது.
அவர்களில் மருத்துவமனைக்கு கொ ண்டு செல்லும் வழியில் இருளப்பசாமி இறந்தார். முனியசாமி, ஈஸ்வரன் கமுதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவர் ஆரோக்கியத்தை(40) கமுதி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment