Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 16, 2014

    பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்களா நீங்கள்?

    பலர், படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வுசெய்ய விரும்புகிறார்கள். இன்றைய நிலையில், உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, அதிர்ஷ்டவசமாக, பணி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.


    நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். ஆனால், அதில் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியமே. கடந்தகால தோல்விகளை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.

    உச்சத்தை அடைய எப்போதும் தயாராக இருங்கள். உங்கள் விருப்பம் மற்றும் தேவையைப் பொறுத்து, நல்ல கல்லூரியில், சிறப்பான படிப்பை தேர்வுசெய்து கடின முயற்சி செய்து படியுங்கள். நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் நிதிநிலை மற்றும் உங்களின் மனப்பாங்கு ஆகியவற்றை எப்போதும் கவனத்தில் கொண்டு, படிப்பை தேர்வு செய்யவும்.

    உங்களின் மேல்நிலை பள்ளிப் படிப்பிற்கு பிறகு, நீங்கள் தேர்வுசெய்து படிக்க வேண்டிய, பல்வேறான படிப்பு வாய்ப்புகளைப் பற்றிய வழிகாட்டுதல் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

    அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு மாணவர்களுக்கான சிறந்த படிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள்

    வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகியப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த, நல்ல மதிப்பெண் எடுத்த மாணவராக நீங்கள் இருக்கலாம். அதேசமயம், உங்களின் எதிர்காலப் படிப்பை தேர்வு செய்வது குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாதவராகவும் நீங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவு மாணவருக்கும், கடல் போன்ற வாய்ப்புகள் உள்ளன. ஆனால், லட்சியத்தை அடைவது குறித்த சரியான மனப்பாங்குதான் முக்கியத் தேவை.

    நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால், உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கைப் பெறுவீர்கள். அறிவியல் பிரிவானது, முக்கியமாக, பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால், அப்படிப்புகளில் சேர்வதற்கு, நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் நடத்தும், சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

    கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரியளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்ன படிப்பை படித்தாலும், பல நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் போட்டித் தேர்வுகளை எழுதுவதும் மிக முக்கியம். உங்களின் படிப்பைத் தேர்வு செய்கையில், எதிர்காலத்தை மனதில் வைத்தே செயல்படவும். மேலும், எங்கே அதிக வாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ளன என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.

    அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான சில நல்ல படிப்புகள்

    மருத்துவ அறிவியல் பிரிவு

    எம்.பி.பி.எஸ்.,
    பி.டி.எஸ்.,
    பி.வி.எஸ்(Veterinary Science)
    பி.பார்ம்.,
    பி.பி.டி(Physiotherapy)
    பி.எச்.எம்.எஸ்(Homoeopathy)
    பி.ஏ.எம்.எஸ்(Ayurveda)
    நர்சிங்
    பி.எஸ்சி., ஆப்டோமெட்ரி
    பி.எஸ்சி., இமேஜிங் டெக்னாலஜி
    பி.எஸ்சி., துணைநிலை மருத்துவ அறிவியல்கள்.

    இவைதவிர, கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில்நுட்பம், மண்ணியல், ஹோம் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள், கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல், பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பி.எஸ்சி., படிப்பு மேற்கொள்ளலாம்.

    பொறியியல் துறை வாய்ப்புகள்

    திறமையான மாணவர்களுக்கு, பொறியியல் என்பது, பிரகாசமான, எப்போதும் பணி வாய்ப்புகளை வழங்கும் பசுமையான துறையாகும். ஆனால், இன்றைய நிலையில், கல்வி வியாபாரத்தின் காரணமாக, எங்கு நோக்கினும் பொறியியல் கல்லூரிகளாகவே உள்ளன. எனவே, பொறியியல் படிப்பில் சேரும் முன்னதாக, சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரம், தரம் குறித்து நன்கு ஆய்வு செய்வது முக்கியம். மேலும், பொறியியல் படிப்பை பொறுத்தவரை, பிரைமரி பீல்டை தேர்வு செய்வதே சிறந்தது. செகண்டரி பீல்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

    கணிப்பொறி அறிவியல்
    எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
    எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
    மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
    சிவில் இன்ஜினியரிங்
    வேளாண் இன்ஜினியரிங்
    ஆர்கிடெக்சர்
    பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
    பயோடெக்னாலஜி (ஆராய்ச்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால்)
    செராமிக் தொழில்நுட்பம்
    கெமிக்கல் இன்ஜினியரிங்
    மரைன் இன்ஜினியரிங்
    மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்
    மைனிங் இன்ஜினியரிங்
    பெட்ரோலியம் இன்ஜினியரிங்
    பிளாஸ்டிக் தொழில்நுட்பம்
    பாலிமர் இன்ஜினியரிங்
    பேஷன் தொழில்நுட்பம்
    ஸ்பேஸ் தொழில்நுட்பம்
    டெக்ஸ்டைல் தொழில்துறை

    போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    பொறியியல் முடித்த பட்டதாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை பணிகள், ஆசிரியர் பணி, நல்ல மதிப்புள்ள தனியார் துறைகள், சிவில் சர்வீஸ், மாநில பொறியியல் துறை பணிகள், எம்.பி.ஏ., படிப்பு, வங்கிப் பணிகள், பாதுகாப்புத் துறை பணிகள், GRE, GMAT ஆகிய தேர்வுகளின் மூலமாக வெளிநாட்டில் மேல்படிப்பு போன்ற வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

    இந்திய பொறியியல் சேவைகள்(IES) அமைப்பானது, இந்திய ரயில்வே, மத்திய பொறியியல் பணிகள், டெலிகம்யூனிகேஷன் துறை, ராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் மத்திய குடிநீர் சேவைகள் ஆகிய பிரிவுகளில் பல நல்ல பணி வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட பட்டதாரிகளுக்கு அளிக்கின்றன. இத்தகைய பணி வாய்ப்புகளைப் பெற, UPSC நடத்தும் பொறியியல் சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    GATE தேர்வில் தேர்ச்சிபெற்ற பின்னர், கேம்பஸ் பணி வாய்ப்புகள், பி.எஸ்.யு., பணி வாய்ப்புகள், சீனியர் புராஜெக்ட் அசோசியேட், கற்பித்தல் அசைன்மென்ட், சீனியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட்ஸ், சயின்டிஸ்ட், ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் விங்க் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

    வணிகப் பிரிவு மாணவர்களுக்கான சிறந்த படிப்புகள்

    சி.பி.டி(CPT - Common Proficiency Test) எனப்படும் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பிறகு, சி.ஏ.,வில் சேரலாம். படித்துக் கொண்டிருக்கும்போதே, பலதரப்பட்ட அரசுப் பணிகளுக்கு முயற்சிக்கலாம் அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படித்தால், பணிசெய்து சம்பாதித்துக் கொண்டே படிக்கலாம்.

    சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி CA வாய்ப்பு

    ICWA கல்வி நிறுவனத்திலிருந்து காஸ்ட் அன்ட் ஒர்க்ஸ் அக்கவுன்டன்ட்

    பி.பி.ஏ., மற்றும் பி.பி.எம்.,

    பி.காம்.,

    பி.ஏ., எகனாமிக்ஸ்

    பி.ஏ., ஜர்னலிசம்

    பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன்.

    எம்.பி.ஏ., படிப்பை முடித்தப் பின்னர், பைனான்ஸ், சேல்ஸ் - மார்க்கெடிங், பெர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் சர்வதேச வணிகம் ஆகிய துறைகளில் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. CAT/XAT/MAT/FMS/IIFT/SNAP ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற முயலவும்.

    சார்ட்டர்ட் பைனான்சியல் அனலிஸ்ட் (CFA)

    கம்பெனி செக்ரட்டரி (CS)

    இந்தப் படிப்பு மிகவும் சிறந்தது மற்றும் வணிக மாணவர்களுக்கு எளிதானது. இப்படிப்பு, நாடு முழுவதுமுள்ள பெயர்பெற்ற பல ICSI கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

    சான்றளிக்கப்பட்ட பைனான்சியல் திட்டமிடுநர் (CFP)

    தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலிருந்து பேஷன் டெக்னாலஜி படிப்பு.

    ஹோட்டல் மேனேஜ்மென்ட்

    ஹவுஸ் கீப்பிங் படிப்பு

    கலைப் பிரிவு மாணவர்களுக்கான சிறந்த படிப்புகள்

    சைக்காலஜிஸ்ட்

    கவுன்சிலர்

    எகனாமிஸ்ட்

    மார்க்கெட் அனலிஸ்ட்

    சோசியாலஜிஸ்ட்

    சோசியல் ஒர்க்கர்

    ஹிஸ்டாரியன்

    ஆன்த்ரோபாலஜிஸ்ட்

    ஹியூமன் ரிசோர்சஸ்

    பெர்சனல் எக்ஸிகியூடிவ்

    எழுத்தர் / ஜர்னலிஸ்ட் / எடிட்டர்

    வழக்கறிஞர்

    லீகல் ஜர்னலிஸ்ட்

    லீகல் அட்வைசர்

    நீதிபதி

    அரசு வழக்கறிஞர்

    ஆவண வரைவு வழக்கறிஞர்

    சிவில் லிடிகேஷன் வழக்கறிஞர்

    லீகல் அனலிஸ்ட்

    மீடியா பெர்சனல்

    பள்ளி ஆசிரியர்

    கல்லூரி மற்றும் பல்கலை பேராசிரியர்

    உள்ளிட்ட பணி வாய்ப்புகள்

    உங்களுக்கு கணிதத்தில் ஆர்வமா?

    கணிதப் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்த ஒருவர் எப்போதுமே முக்கியத்துவம் பெற்றவராக இருப்பார். இத்துறை சார்ந்தவருக்கு, உலகம் முழுவதும் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி, அக்கவுன்டிங், புள்ளியியல், பல்வேறான அக்கவுன்ட்டுகளை பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்டவற்றில் எப்போதுமே பணி வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கற்பித்தலில் ஆர்வம் இருந்தால், நல்ல கணித ஆசிரியராக விளங்கலாம் அல்லது முதுநிலை கணிதப் படிப்பை மேற்கொள்ளலாம். கீழ்கண்டவைகளில், சிறந்த ஒன்றை தேர்வு செய்யவும்.

    அறிவியல் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு

    மேலாண்மை சேவைகள் மற்றும் கம்ப்யூட்டிங்

    பைனான்சியல் பணி

    டேக்ஸ் ஆலோசகர்

    மீன்வளர்ப்பு பணி

    சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

    வங்கிப் பணி வாய்ப்புகள்

    புள்ளியியல் பணி

    கற்பித்தல்

    முதுநிலைப் படிப்பு உள்ளிட்டவை.

    சட்டத் துறையில் ஆர்வமா?

    சட்டத் துறையில் நுழைந்து சாதிக்க விரும்பினால், பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, 5 வருட சட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். எல்.எல்.பி., படிப்பு, இந்திய பார் கவுன்சிலால், கட்டுப்படுத்தப்பட்டு நெறிமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேரும் முன்னதாக, உங்களால் நிதித் தேவையை சமாளிக்க முடியுமா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வத்தை அடிப்படையாக வைத்து, கீழ்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை படிப்பின்போதே தேர்வுசெய்து கொள்வது நல்லது. அவை,

    கிரிமினல் வழக்கறிஞர்
    லீகல் ஜர்னலிஸ்ட்
    லீகல் அட்வைசர்
    நீதிபதி
    அரசு வழக்கறிஞர்
    ஆவண வரைவு வழக்கறிஞர்
    சிவில் லிடிகேஷன் வழக்கறிஞர்
    லீகல் அனலிஸ்ட்.

    மேலாண்மைத் துறையில் ஆர்வமா?

    மேலாண்மைப் படிப்பை மேற்கொள்வோருக்கு பரவலான வாய்ப்புகள் உள்ளன. பார்ட்டி பிளானிங், சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பணிகள், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் பணிகள், லாஜிஸ்டிக் செக்மென்ட் பணிகள், பேரிடர் மேலாண்மை புரோகிராம்கள், பிரான்ட் மேனேஜ்மென்ட் பணிகள், பணம் மற்றும் ஆபரேஷன் மேனேஜ்மென்ட் பணிகள், சேல்ஸ், மார்க்கெடிங் மற்றும் மார்க்கெட் ஆராய்ச்சி, பர்ச்சேசிங் மற்றும் கட்டுமானப் பணிகள், இன்டஸ்ட்ரியல் அன்ட் ரியல் எஸ்டேட் பணிகள், கன்சல்டன்சி அன்ட் சர்வதேச வணிகம், மனிதவளம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு பணிகள், ஈவென்ட் / மெட்டீரியல் / சில்லறை வணிக மேலாண்மைப் பணிகள்.

    வங்கி மற்றும் நிதித்துறையில் ஆர்வமா?

    மேற்கண்ட துறைகளில் ஆர்வமுள்ளோர், நல்ல ஊதியம் கிடைக்கும் பணி வாய்ப்புகளில் சேரலாம். அவற்றில் சில,

    டேக்சேஷன் மற்றும் முதலீட்டு வங்கிப் பணிகள்

    பாரன்சிக் அக்கவுன்டிங் மற்றும் பைனான்சியல் அனலிசிஸ்

    மியூச்சுவல் பன்ட்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் துறை பணிகள்

    சி.ஏ., / காஸ்ட் மற்றும் ஒர்க் அக்கவுன்டன்சி பணிகள்

    கம்பெனி செக்ரட்டரி மற்றும் கேபிடல் மார்க்கெட் பணிகள்.

    எனவே, ஒரு மாணவர் தனக்கான எதிர்கால வாய்ப்புகளை, பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நன்கு யோசித்தே முடிவுசெய்ய வேண்டும். ஒருவரின் வருங்கால தொழில்துறை என்பது, எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவமாக இராமல், நன்கு யோசித்து தேர்வுசெய்த அம்சமாக இருக்க வேண்டும்.

    No comments: