மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது. பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.
அவை வருமாறு:
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும், 16,500 ஆசிரியர்களுக்கான சம்பளம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் பெரும் தொகை
பள்ளிகளில், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்
மாதிரிப் பள்ளிகள்
புதிய ஆசிரியர் நியமனம்
புதிய வகுப்பறைகள் கட்டுதல்
புதிய பள்ளிகளை துவக்குதல்
உள்ளிட்ட, பல திட்டங்களுக்கு, மத்திய அரசு, ஆண்டுதோறும் தொடர்ந்து நிதி அளிக்கிறது.
ரூ.19.9 லட்சம் : வரும் கல்வி ஆண்டில், 5,791 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கணினி வழி கல்வி திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு பள்ளிக்கு, 19.9 லட்சம் ரூபாய் வீதம், செலவிடப்பட உள்ளது. மொத்த செலவில், 75 சதவீதம், மத்திய அரசும், 25 சதவீதம், தமிழக அரசும் செலவிடும். திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளன. ஆனால், புதிதாக அமைய உள்ள மத்திய அரசிடம், நிதியை எதிர்பார்ப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொடர் திட்டங்கள், புதிதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் நிலை என்னவாகும், அவற்றை, தொடர்ந்து செயல்படுத்த, மத்திய அரசு அனுமதிக்குமா என தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மட்டும், எந்த பிரச்னை யும் ஏற்படாது என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு, மே மாதம் வரை, ஆசிரியர்களுக்கான சம்பள தொகையை தர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், திட்டங்களுக்கான நிதியை, முன்கூட்டியே வழங்கவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொய்வு : எனவே, வரும் கல்வி ஆண்டின், முதல் சில மாதங்கள் வரை, மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், தொய்வு ஏற்படலாம் எனவும், அதன்பிறகே, ?தளிவு கிடைக்கும் எனவும், கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
2 comments:
No doubt. BJP confirm.
BJP will allot more fund than Congress.
Post a Comment