Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 3, 2014

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிக்க, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள்

    தேர்தல் பணியில் இருப்ப வர்கள் வாக்களிப்பதற்கு படிவம் 12 மற்றும் படிவம் 12ஏயில் விண்ணப் பிக்க வேண்டும் என்று சிதம்பரம் பாராளு மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சரவண வேல் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறி இருப்பதாவது


    பணியாற்றும் தொகுதியில்
    தேர்தல் நாளன்று, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலு வலர்கள், முன்னாள் ராணுவத் தினர், ஓய்வு பெற்ற காவலர்கள், ஊர்க் காவல் படையினர் மற்றும் ஓட்டு நர்கள் ஆகியோர் சிதம்பரம் பாராளு மன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ளவராக யிருப்பின் தேர்தலின்போது பணிபுரியும் சாவடியில் தேர்தல் பணி சான்றுடன் வாக்களிக்கலாம். இதற்கு இவர்கள் படிவம் 12ஏ–வில் விண்ணப்பிக்க வேண்டும்.
    வேறு தொகுதியில்
    தங்களது பெயர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்கலாம். இதற்கு இவர்கள் படிவம் 12–ல் விண் ணப்பித்தினை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவல ருக்கு அனுப்பி வைக்க வேண் டும்.படிவம் 12 மற்றும் 12ஏ ஆகியவற்றை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் அறை எண்:114–ல் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரத்தினை அறிந்து கொள்வதற்கு வசதி யாக தேர்தல் பயிற்சி நடை பெறும் இடங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலு வல கத்தில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளது.
    மேலும் வாக்காளர் பட்டிய லில் பெயர் இடம் பெற்றுள்ள விவரத்தை அறிந்து கொள்ள மீஜீவீநீ இடைவெளி, வாக்காளர் அடையாள அட்டை எண், என்ற குறுஞ்செய்தியை 94441 23456 எனும் கைபேசி எண்ணிற்கு அனுப்பி வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண் போன்றவை அறிந்து கொள்ளலாம்.
    படிவம் 12 மற்றும் 12ஏபூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை சரியாக குறிப் பிட்டும், சரியான வசிப்பிட முகவரியை பின் கோடு எண் ணுடன் தெளிவாக குறிப்பிட் டும், தேர்தல் பணி ஆணையின் நகலினையும் இணைத்து அஞ்சல் வாக்கு பிரிவு, அறை எண்:114, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரியில் வருகிற 17–ந் தேதி க்குள் நேரடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    No comments: