திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் ஆசிரியர்களுக்கு வெகு தொலைவில் தேர்தல் பணி வழங்க கூடாதென ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட தலைவர் கங்காதரன், செயலாளர் டேவிட் ராஜன் உள்ளிட்டோர், கலெக்டர் ஞானசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அம்மனுவில், அவர்கள் தெரிவித்ததாவது: வரும் 24ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள திருவண்ணாமலை மாவட்ட பெண் ஆசிரியர்களுக்கு வெகுதொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், பெண் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி பெண் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற பணியானை வழங்க வேண்டும். தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பும் பெண் ஆசிரியர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஞானசேகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment