Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 1, 2014

    ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் வாக்குகள் யாருக்கு?

    சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

    தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது.

    ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, மாநில அரசை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்ற இடைநிலை ஆசிரியர்கள், 'மாநில மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவு பெற்றதற்காக, பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தில், 'கை' வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதில், 7,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அவர்கள் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின், அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற, 9,564 இடைநிலை ஆசிரியர்கள், 2012ல் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கும், 5,200 என்று தான் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழகம் முழுவதும் மொத்தம், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் வரும் தேர்தலில், 'நோட்டோ'விற்கு (யாருக்கும் ஓட்டளிக்கவில்லை) ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

    21 comments:

    Sam said...

    Vote for admk

    மனம் said...

    yanaku itha senja vote poduven illana vote podamatten yenbathu paditha teacher seium velaya? jananayagam uruppaduma oru vagail teacher s kooda ilavasam(salary demand) ketpathu pola irukku

    Anonymous said...

    hello engaluku tharavendiya central govt pay va than kekkrom avanga money ya illa...

    Anonymous said...

    kodisvari nithiya mam 5 th pay commission vita 6th commission il salary kuraikapattathu theriyuma ? urimai than kedkirom ilavathai alla matravarkaluku koduppathai u didn't ask but why SG? voting is our Rights U know that? soona vakurithy ya niraivetratha arasu ithu ithuku neenga vagalathu vera tell UR GP ?

    Anonymous said...

    nithiya mam niraya vanrangala ?

    Anonymous said...

    nithiya may be ADMK canvasser?

    Anonymous said...

    1988 to 2006 varai kodutha salary than kedkirom NIIIIIIIIIIthIIIIIIII ya mam

    Anonymous said...

    vote admk get aappu then nithiya

    Anonymous said...

    engaluku vendiyathu free alla neethi vendum?

    Anonymous said...

    urumiyai kedu pera theriya teacher avarudaiya student eppadi kedpan?

    Anonymous said...

    we want nithiya mam replay

    Anonymous said...

    Salaryum ilavasamum onnu thana madam!!!!!!:?:???????

    Anonymous said...

    Unmai nilai theriyamal ularathinga nithya madam

    phenix said...

    vote podurathum podamal irukarathum avar avar urimai.itula entha comments um koukamal ungal manathirku ethu sariyo adai seivom friends.yar methum kopapadurathu avasiyamilai friends.

    Anonymous said...

    ????????????

    மனம் said...

    என் பெயர் நித்தியானந்தம் நான் ஒரு ஆண் ஆசிரியர். நான் 2012ல் நடந்த டியீடி ல் தேர்வான சாதரன இடைநிலை ஆசிரியர் தான் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் எனவே எனக்கு ஊதியம் போதும் என்று கூறவில்லை நம் போராட்டம் சரியாக செய்ய வில்லை உதாரணமாக இடைநிலை ஆசிரியர் எண்ணிக்கை தோராயமாக ஒரு லட்சம் போராட்டம் எனில் கலந்துக்கொள்ளூம் ஆசிரியர்கள் எண்ணிக்கை சிலநூறுபேர் எங்கே நம்ஒற்றுமை .சத்துணவு&அங்ஙகன்வாடி ஊழியர்கள் அனைவரும் பெண் கள் போராட்டம் என்றால் அனைவரும் கலந்துகொண்டு போராடுகின்றனர் .நம் போராட்டத்தில் எங்கே போனார்கள் பெண் ஆசிரியர் கள்? அத விடுங்க சார் தலைமையாசிரியை பதவி உயர்வை ஏற்கும் பெண் ஆசிரியர் கள் சங்கங்களின் தலைவி பதவியை ஏன் ஏற்பது இல்லை உங்களிடம் விடை உண்டா? பெண்களின் போதும் என்ற மனம் தான் காரணம். நானும் என் தலைமையாசிரியை போராட்டத்தில் கலந்துக்கொள்ளூமாறு கேட்டேன் அதற்கான பதில் போங்க சார் கொடுப்பதே அதிகம் என்றார் அவர் இதுதான் நம்மிடம் உள்ள குறை .என்னுடைய ஒரே கருத்து ஒன்றுபட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம். வாழ்க ஆசிரியர் சமுதாயம் நன்றி

    மனம் said...
    This comment has been removed by the author.
    மனம் said...
    This comment has been removed by the author.
    மனம் said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    ok ok ok Nithiyanatham sir neengal comment seytha "free" enpathu kopapatavaithathu 2000 mun appointments SGT got 4200 gp we get 2800 enna koduma ithu ,many HM their qulification is just 8th or 10 th std only so they may be think like that other diploma holder qual to Dted get 4200 gp but Dted ????????? in tamilnadu,10th std qulification employ get qual to Dted qulification so Dted is waste one and join SGT also waste 10th std pothum to get GGGGGGGGGGGGGGPPPPPPPP2800 like assitant in tamilnadu

    மனம் said...

    முதலில் நாம் செய்ய வேண்டியது 2800 தர ஊதியம் பெறும் ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே சங்கத்தில் இணைப்பதுதான் முடியுமா? என்னுடைய கல்வித்தகுதி MA., BSc., BEd. ஆனால் நான் பெறும் தர ஊதியம் 2800 கஷ்டமாகதான் உள்ளது