பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்காக அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 7அ தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் பகுதியில் கேள்வி எண் 14ல், "ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை என்ன..." என, கேட்கப்பட்டது. இதற்கு, "குவிலென்ஸ்" என்பது விடை. ஆனால், "குழிலென்ஸ்" என்ற வேறொரு விடையும் உள்ளது. இந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இரு மதிப்பெண் பகுதி தமிழ் வழி கேள்வி எண் 29ல் "வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை..." என்ற கேள்விக்கு ஆங்கில வழி கேள்வித்தாளில், "பயோ - பியூல்" என, கேட்டு தமிழ்வழி கேள்வித்தாளில் "உயிரி எரிபொருள்" என, கேட்காமல் பொதுவாக கேட்டுவிட்டனர்.
இதனால், மாணவர்கள், "பெட்ரோல், டீசல்" என, விடை எழுதினர். இதனால், மதிப்பெண் கிடைப்பது கேள்விக்குறியானது. இந்நிலையில், இந்த கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவு விட்டுள்ளதாக பாட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment