Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 6, 2014

    பிளஸ் 2 உயிரியல் தேர்வில், தவறான கேள்விகளுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவு

    கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு.
    இதையே, ஹார்மோன் என, கேட்டது தவறு. கேள்வி எண், 9ல், 'நொதி' என்ற வார்த்தைக்குப் பதில், 'அமிலம்' எனவும், 14வது கேள்விக்கான மூன்று விடைகளில், 'கோலி' என்பதற்குப் பதில், 'கோவை' எனவும், கேட்கப்பட்டது. எனவே, இந்த, மூன்று கேள்விகளுக்கும், தலா ஒரு மதிப்பெண் வீதம், மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இரு கேள்விக்கு மட்டும், 2 மதிப்பெண் வழங்கவும், 14வது கேள்வி விடையில், எழுத்துப்பிழை மட்டுமே உள்ளது. இதற்காக, கருணை மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளதாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    No comments: