திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவனை ஆசிரியை தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டதாக ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவனின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
திருநெல்வேலி வட்டம், திருவேங்கடநாதபுரம் அத்திமேடு கிராமம், முப்புடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சு. குமார் மகன் ஐயப்பன் (15). ஐயப்பன்நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலையில், தேர்வு தொடங்கும் முன்னதாக பள்ளி ஆசிரியை மாணவனை தேர்ச்சி பெற வாய்ப்பில்லை. ஆகவே தனியார் டூடோரியல் மையத்தில் சேர்ந்து தேர்வு எழுதுமாறு தெரிவித்தாராம்.
இந்நிலையில் ஏப். 26 ஆம் தேதி தேர்வு எழுத சென்ற ஐயப்பனை, வகுப்பாசிரியை மற்றொரு மாணவி மூலம் தேர்வு எழுத வேண்டாம் என தெரிவித்தாராம்.
மாணவன் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் முதல், 2 ஆம் தாள் தேர்வு எழுதவில்லை. கணிதம், அறிவியல் தேர்வு எழுதியுள்ளார். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாணவனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர், புகார் மனு அளித்தனர்.
மனுவில், எழுதப் படிக்க தெரியாத எங்களுக்கு மகன் ஐயப்பனை தேர்வு எழுத வேண்டாம் என ஆசிரியை தெரிவித்த தகவல் தாமதமாகத்தான் தெரியும். அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் டான்பாஸ்கோ: பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் ஏப். 25 ஆம் தேதி அனுமதி சீட்டு வழங்கி தேர்வினை சிறப்பாக எழுதுமாறு வாழ்த்து தெரிவித்து அனுப்பினோம். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வேறு வேறு மையங்களுக்கு தேர்வு பணிக்காக சென்று விட்டோம்.
மாணவன் ஐயப்பன் தேர்வு எழுதாதது 4 தினங்களுக்கு பிறகுதான் தெரிய வந்தது. ஆசிரியை மாணவனை தேர்வு எழுத வேண்டாம் என்று கூறவில்லை. மாணவன் அறியாமை காரணமாக தேர்வு எழுத செல்லாமல் இருந்திருக்கலாம் என்றார் அவர்.
கல்வி அதிகாரி: புகார் குறித்து ஆசிரியை, தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவன் ஐயப்பனுக்கு தேர்வு எழுத தேர்வுக் கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மாணவனை தேர்வு எழுத வேண்டாம் என யாரும் தெரிவிக்கவில்லை. மாணவன் கணிதம், அறிவியல் பாடங்களில் தேர்வு எழுதி உள்ளான். எழுதாத பாடங்களை வரும் ஜூன் மாதத்தில் மாணவனை தேர்வு எழுத வைத்து தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதன்மை கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு
5 comments:
C.M srirangam t.v.koil thokithiyil irukkum hr.secondary and high school slow learners students sslc exam elutha HM anumathikka villai. DEO and CEO thalamaiyil Ikkodumai inithe arankeriyathu. Thanks for Tamilnadu Educational Department.
Hms down down deo down down ceo down down tamilnadu educational dept down down
Yar than sir ivarkalai thandippathu manavarkalin kalvi kanave.
Tnkalvi down down
Salary rise panna mattum teachers and tnkalvi kural kodukkum . Students ku illa. Tnkalvi waste
Post a Comment