Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 28, 2014

    வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

    வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.

    அதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.
    வாக்குசாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நிலை உதவியாளர் அல்லது உதவியாளர் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.2800 முதல் ரூ.4800 வரை பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
    வாக்குசாவடி அலுவலர் 2 ஆக நியமிக்கப்படுபவர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.
    வாக்குசாவடி அலுவலர் 3 ஆக நியமிக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர், உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 முதல் ரூ.2800 வரை பெறுபவர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்
    என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2 comments:

    பிரதீப் ஹரி said...

    புனிதமான ஆசிரியர் பணியில்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள்.இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் புனிதத்தை போற்றுங்கள் ஆசிரியப் பெருமக்களே!

    Anonymous said...

    பாடம் நடத்துவதுடன், பிற ப்ணிகள் அனைத்துக்கும் ஆசிரியர்கள் தேவை.ஆனால் தர ஊதியம் மட்டும்...?????????