மதிப்பெண் பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டித்து கடலூரில் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் நெல்லிக்குப் பம் சாலையில் கே.என்.சி மகளிர் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர்.
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட் டின் கீழ் இந்த கல்லூரி இயங்குகிறது. இந்த பல்க லைக் கழகத்தின் கீழ் 108 கல்லூரிகள் செயல்படுகின் றன. சுமார் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் கடந்த மாதம் பருவத் தேர்வை எழுதி னார்கள். கே.என்.சி மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு எழுதிய பருவத் தேர்வுகளுக்கு செவ்வாய்க் கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்த தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பதி விறக்கம் செய்து பார்த்த போது, அதிர்ச்சி காத்திருந் தது, தேர்வு எழுதிய மாண விக ளுக்கு தேர்வில் பங் கேற்கவில்லை எனவும், நன் றாக படிக்கும் மாணவிக ளுக்கு 10, 20 என குறைவான மதிப்பெண்களும், தேர்வுக்கு வராத மாணவிகளுக்கு 80, 90 மதிப்பெண்களும் வழங் கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
பல்கலைக்கழகத் தோடு தொடர்பு கொண் டால் முறையான பதில் கிடைக்கவில்லை.இந்நிலையில் இந்த குளறுபடியை கண்டித்து, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்க ளும் பங்கேற்றனர்.இதுகுறித்து இளங் கலை வரலாற்றுத்துறை மாணவி ஹேமலதா கூறு கையில், “90 மதிப்பெண்க ளுக்கு மேல் மதிப்பெண் எதிர்பார்த்த மாணவிகள் பலருக்கு 20 மதிப்பெண்க ளுக்கு குறைவாகவும், சில ருக்கு தேர்வில் பங்கேற்க வில்லை எனவும் மதிப் பெண் பட்டியலில் பதிவாகி உள்ளது” என்றார்.
இது குறித்து இக்கல் லூரி பேராசிரியரும், திரு வள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பி னருமான சாந்தி கூறுகை யில், ‘கடந்த 2011 ஆம் ஆண்டில் இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவி களுக்கு, இதுவரை தற்காலிக கல்வி சான்று மற்றும் தொகுப்பு மதிப்பெண் சான்று, பல மாணவிக ளுக்கு இதுவரை கிடைக்க வில்லை’ என்றார்.ஒரு மாணவி எவ்வளவு மதிப்பெண் வாங்குவார் என்பது பேராசிரியருக்கு தெரியும். இப்போது வெளி யாகி உள்ள தேர்வு முடிவு களில் இதுவரை பார்த்திராத அளவுக்கு மிக மோசமான குளறுபடிகள் நடந்துள்ளளன.
இதனால் மாணவிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதோடு, இந்த பல் கலைக்கழகம் மீதே நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் தெரி வித்தார்.இதுபோல் தேவனாம் பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர் கள், தங்களுக்கும் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி உள்ளதாகக் கூறி வகுப்பு களைப் புறக்கணித்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னணி: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பதிவு செய்யும் பணி, கடந்த ஆண்டு வரை, பல்கலைக்கழக பணி யாளர்கள் மூலம் மேற் கொள்ளப்பட்டதாகவும், இப்பணியில் ஈடுபட்ட கணினி பணியாளர்கள் 62 பேர் தற்காலிக அடிப் படையில் பணியாற்றிய தாகவும், அவர்கள் அனை வரும் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதா கவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இப்போது, தனியார் நிறுவனம் (அவுட் சோர் சிங்) மூலம் ஒப்பந்த அடிப் படையில் மதிப்பெண் களை கணினியில் பதிவு செய்யும் நடைமுறை உள்ள தாகவும் கூறப்படுகிறது. இப்பணியில் அனுபவம் இல்லாத பணியாளர்க ளும், இதனை சரிபார்க்க பல்கலைக்கழகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததுமே இந்த குளறு படிகளுக்கு காரணம் என் கிறார் மூத்த பேராசிரியர்.
No comments:
Post a Comment