6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3-ம் பருவ தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.
பிளஸ்-1 தேர்வு
தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகளை முன்பாகவே நடத்த வேண்டும் என்று தேர் தல் ஆணையம் பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உள் ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களும் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 25-ந் தேதியுடன் முடிகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக் கான தேர்வு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறியதாவது:-
3-ம் பருவ தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படித்து வரும் மாண வர்களுக்கான 3-ம் பருவ தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி முடிகிறது. 9-ம் வகுப்பு படிக்கும் மாண வர்களுக்கு தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4½ மணி வரை நடக்கிறது. இதே போல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு காலை 10 மணி முதல் 12½ மணி வரையிலும் நடக்கிறது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி கூறினார்.
3 நாட்கள் விடுமுறை
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தேர்தல் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்படும் என்ப தாலும் ஆசிரியர்களும் தேர் தல் பணியில் ஈடுபடுத்தப்படு வார்கள் என்பதாலும் ஏப்ரல் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் பள்ளி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படு கிறது. அந்த 3 பணி நாட்களை ஈடுகட்டும் விதமாக வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) ஏப்ரல் 5-ந்தேதி (சனிக்கிழமை) ஏப்ரல் 26-ந்தேதி (சனிக் கிழமை) ஆகிய 3 நாட்கள் வேலை நாட்களாக செயல் படும்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான 3-ம் பருவ தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 21, 22, 26, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் நடத்த வேண்டும். 30-ந்தேதி பள்ளி வேலை நாளாகும். மே மாதம் 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள் ளது.
இவ்வாறு மாவட்ட தொடக் கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment