தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினார்கள். மாணவர்களுடன் சென்னை புழல் சிறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இந்த வருடம் விடைத்தாளில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடத்தின் பெயர் போன்ற அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய கையெழுத்தை மட்டும் பதிவு செய்தனர்.
இன்று நடந்த மொழித் தேர்வுகளை மாணவர்கள் உற்சாகமாக எதிர்கொண்டனர். தமிழ்ப் பாடக் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு சில மாணவர்கள் எளிதாகவும் இல்லாமல், கடினமாகவும் இல்லாமல் சராசரியாக இருந்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment