Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 14, 2013

    தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம்

    தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற, தேசியளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம் என, ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.
    அரூரை அடுத்த கோ.கூட்டுரோட்டில் இந்தியன் சி.பி.எஸ்.இ பள்ளித் தொடக்க விழா கல்வி நிறுவனத் தலைவர் ஏ.கே.பழனியப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியைத் தொடக்கிவைத்து ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு பேசியது:

    மாநிலக் கல்வித் திட்டம், சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகையான பாடத் திட்டங்கள் தமிழகத்தில் அமலில் உள்ளன. தமிழக மாணவர்கள் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஸ், வங்கித் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால், தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம்.

    தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் அதிகளவு மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலும், ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டமும் ஒன்றாக உள்ளது என்றார் அவர்.

    விழாவில், வட்டாட்சியர் அ.ஜெ.செந்தில்அரசன், மருத்துவர் எம்.முருகன், இந்தியன் கல்வி நிறுவன துணைத் தலைவர் ஏ.கே.பி மூர்த்தி, செயலாளர் ஆர்.முத்துசாமி, பொருளாளர் எம்.பி.இளையப்பன், இணைச் செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் என்.சுப்பிரமணி, ஏ.குமாரசாமி, என்.முருகேசன், சசிகலா மூர்த்தி, பள்ளி முதல்வர்கள் எஸ்.அமலநாதன் (சிபிஎஸ்இ), ஜெ.ஜான் இருதயராஜ் (மெட்ரிக்), பி.டி.ஆர்.வி கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் கே.கார்த்திக், வெற்றி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளித் தலைவர் எம்.எம்.கோபிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    No comments: