மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த விழாவில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.ஈரோடு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், 11ம் ஆண்டாக, நேற்று, மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகித்தார்.கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும், ப்ளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.ஸி., யில் நூறு சதவீதம் பெற்ற, 36 அரசுப் பள்ளிகள், ப்ளஸ் 2வில் நூறு சதவீதம் பெற்ற, எட்டு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.அதேபோல், விளையாட்டு, பொதுஅறிவு, பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை உருவாக்கிய, ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.என்.எஸ்.எஸ்., தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசியப் பசுமைப்படை, சாலைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளில் சாதனைப் படைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு கல்வி மாவட்ட சி.இ.ஓ., ஸ்ரீதேவி, ஈரோடு யு.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தேவராஜன், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment